சைவத்திருமுறையில் திருவிசைப்பா: ஓர் அறிமுகம் (Thrivasipapa in Saivism: An Introduction)

Authors

  • Seeta Letchumi R., Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya.

DOI:

https://doi.org/10.22452/JIS.vol11no1.6

Abstract

Religion enriches the mankind. Religion, religion, ethics, religion are many words that refer to one, the path. 'Religion (samayam) means to unite or reunited with the Lord.  Religion seems to have grown along with the time when mankind began to acquire knowledge. Religious need is one of the natural needs of man. Fulfilling this as service satisfyingly is the ultimate aim of one. Overall, the Saivist Njanasampanthar presented as Saiva Thirumurais, starting with the theravara padikas sung by Njanasampandar up to the great Tiruttondarpuranam sung by Chekilar. The last one in the list is the Thiruvizaippa, which is the ninth transept, with least hymns. Yet, it consists of a great place among the other padikas that recited in the Sivathalas. This article explores the exponential components of the Thiruvizaippa, to show its worthiness.

ஆய்வுச் சுருக்கம்

மனிதக் குலத்தைப் பண்படுத்துவது சமயம். சமயம், மதம், நெறி, மார்க்கம் என்பன ‘வழி' என்ற ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். ‘சமயம்' என்பதற்கு, இறைவனோடு ஒன்றுபடுத்துவதற்கு அல்லது மீண்டும் பிணைப்பதற்குரிய வழி எனப் பொருள்படும். மனித இனம் அறிவுத்திறம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே சமயமும் உடன் வளர்ந்து வந்ததாகத் தோன்றுகிறது. சமயத் தேவை மனிதனது இயற்கைத் தேவைகளுள் ஒன்று என்பதுடன் இத்தேவை நிறைவு செய்யப்படுவது மனநிறைவினைத் தருவதாகவும் அமைகிறது. மொத்தத்தில், திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் தொடங்கி சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் வரையுள்ள சைவ அருள் நூள்கள் சைவத் திருமுறைகள் என வழங்கப்பெறுகின்றன. இப்பன்னிரு திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறையாகத் திகழும் திருவிசைப்பா அளவால் மிகவும் குறைந்த பாடல்களைக் கொண்டிருந்த போதும், சைவ மரபில் சிவத்தலங்களில் ஓதம்பெறும் பஞ்சபுராணத்தில் இத்திருமுறைப் பதிகமும் உள்ளடங்கியுள்ளது இத்திருமுறைக்கேயுரிய தனிப்பெறும் சிறப்பம்சமாகும் எனலாம். பண்டைக் காலந்தொட்டு இன்றளவும் சிவநெறியாகிய தமிழ்நெறி உள்ளளவும் இத்திருமுறைப் பதிகங்கள் சைவ உலகுக்கு வழிகாட்டும் பெருஞ்செல்வங்களாகத் திகழ்வது உறுதியாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Seeta Letchumi R., Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya.

The author is a Senior Lecturer in the Department of Indian Studies in the Faculty of Arts and Social Sciences, University of Malaya.

Downloads

Published

2018-04-01

Issue

Section

Articles