இந்தியர்களின் சோதிடக்கலை: ஓர் அறிமுகம் (The Astrology of Indians: An Introduction)

  • Sivapalan Govindasamy, Mr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

Abstract

The aimed at elevating the general public’s understanding of Indian Astrology, including its origin and definition. Astronomical views about Astrology, as well as the relationship between Astrology and Astronomy, were also highlighted in this article. It also addresses the belief system surrounding the Indian Astrology. On top of giving an overall view of the Astrological beliefs that prevalent in various countries, the article also discusses the variety of Indian Astrology, as it is widely regarded as one of the major systems in the world. For this, it is importance to understand how the Astrology works and benefits the public. Therefore, the article describes the intricate process and the disciplines that required to practice this art. Indian Astrology, in particular, has been meticulously studied and the knowledge has been passed on to subsequent generations by Astrologers. The contributions and publications of these Astrologers were also detailed in this article. As the current society has developed a keen sense of critical thinking, scientific reasoning has become crucial to prove the validity of theories and systems. In keeping this in view, the scientific basis of Astrology were also discussed here. Since Indian Astrology has a vast majority of Hindu followers, the article also explores the relationship between the Astrological art and the Hindu religion’s law of karma, besides of explaining the benefits of the proper practice and extensive understanding of Indian Astrology.


ஆய்வுச் சுருக்கம்


இக்கட்டுரை இந்தியர்களின் சோதிடக் கலையைப் பற்றிய ஒரு பொதுவான புரிதலைக் கொடுக்கின்ற நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கின்றது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள இந்திய சோதிடக்கலையைப் பற்றிய விளக்கங்களும் குறிப்புகளும் மக்கள் சோதிடக்கலையை பற்றி அறிந்துகொள்ள துணைசெய்யும். சோதிடக் கலையைப் பற்றிய பொதுவான புரிதலைப் பெற்றிருப்பதற்கு, சோதிடம் என்னும் பெயருக்கான சொற்பொருள் விளக்கம் அறியப்படவேண்டும். எனவே இக்கட்டுரையில்  அதுசார்ந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இக்கலைக்கு அடிப்படையாக உள்ள விண்ணியல் சார்ந்த செய்திகளும், விண்ணியலுக்கும் சோதிடத்துக்கும் இடையிலான தொடர்புகளும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவற்றைப்பற்றியும் இக்கட்டுரை  விளக்குகின்றது. எதன்பொருட்டு சோதிட நம்பிக்கை உருவாகியிருக்கக்கூடும் என்பதைப்பற்றிய புரிதல்  மிக முக்கியமானதாகும். எனவே அதைப்பற்றியும் இக்கட்டுரை கருத்துரைக்கின்றது. உலக சோதிடங்களுள் இந்திய சோதிடம் முதன்மை வகிப்பதனாலும் இக்கட்டுரையின் மையக்கருத்து இந்திய சோதிடத்தைப் பற்றி அமைந்திருப்பதனாலும்  இந்திய சோதிடத்தைப் பற்றிய விளக்கங்கள் சற்று விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இனி, சோதிடக்கலை இயலும் முறையைப் பற்றிய புரிதலும் இன்றியமையாததாகின்றது. எனவே இக்கட்டுரை, சோதிடம் இயற்றப்பட்ட  முறையையும் அக்கலை இயலும் முறையையும் விளக்குகின்றது. இந்திய சோதிடத்தைக் காலந்தோறும் பல தலைமுறைகளாகத் தொடரச் செய்வதில் சோதிடர்களும் அவர்கள் இயற்றிய நூல்களும் அளப்பரிய பங்காற்றியுள்ளன.அவற்றையும் இக்கட்டுரை விளக்கமாகத் தருகின்றது. இன்று எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கு உலக வழக்காகிவிட்டது. எனவே நம்பிக்கை சார்ந்த இக்கலை அறிவியல் சார்ந்ததா என்னும் விளக்கத்தையும் இக்கட்டுரை அளிக்கின்றது. இந்தியர்களுள் பெரும்பிரிவினரான இந்துக்கள் நம்புகின்ற கலையாதலால் இச்சோதிடக்கலைக்கும் இந்து சமயத்தின் கோட்பாடுகளின் முக்கியக்கூறான கருமவினைக்கும் இடையிலான தொடர்பும் இக்கட்டுரையில் சுட்டப்பெறுகின்றது. சோதிடக் கலையினால் விளையும் பயன்தான் என்ன என்பதைபற்றிய தேடல், இக்கலையைப் பற்றிய ஒட்டுமொத்தப் புரிதலுக்கும் உதவும் என்பதனால் சோதிடக்கலையின் பயன் என்னும் பொருளிலும் இக்கட்டுரையில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இந்திய சோதிடக் கலையைப் பற்றிய பொதுவான புரிதலை இக்கட்டுரையை வாசிப்பவர்கள் பெறவியலும்.

Downloads

Download data is not yet available.
Published
2020-02-01
How to Cite
GOVINDASAMY, Sivapalan. இந்தியர்களின் சோதிடக்கலை: ஓர் அறிமுகம் (The Astrology of Indians: An Introduction). Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்), [S.l.], v. 12, p. 82-94, feb. 2020. ISSN 2735-0037. Available at: <https://ejournal.um.edu.my/index.php/JIS/article/view/24898>. Date accessed: 29 oct. 2020. doi: https://doi.org/10.22452/JIS.vol12no1.6.
Section
Articles