The Beginning of Siddha Medicinal Books in Tamil

தமிழில் சித்தர் மருத்துவ நூல்களின் தோற்றம்

Authors

  • Dr. Bala Sivakadadcham 69 Havenview Road, Scarborough, Ontario, Canada

Keywords:

Siddha medicine, Alchemy, Rasayana Tantra, Rasa medicine, Syphilis, Chobchini, Agastier books, Bogar 7000, சித்தமருத்துவம், இரசவாதம், இரசாயன தந்திரம், இரசமருந்துகள், பறங்கிரோகம், பறங்கிப்பட்டை, அகத்தியர் நூல்கள், போகர் ஏழாயிரம்

Abstract

The texts that can be recognized as belonging to the Siddha system of medicine are found mostly in Tamil. Such texts are available under the names of many known Siddhas, including Agastier, Thiruvalluvar, Dhanvantari, Thirumoolar, Bogar, Pulippani, Kambalachattaimuni, Korakkar, and Machchamuni. However, there is no conclusive or reliable data on the time in which these texts related to Siddha medicine were written. This article reviews the origins of Siddha medical texts in Tamil with the help of historical and literary evidence available today. By examining the Tamil medical texts available in the names of Siddhas, not only based on their linguistic status but also on the basis of internal evidence available in those texts, it is possible to confirm the age of composition of these texts to a period between the 16th century and the 19th century

சித்த மருத்துவ முறைக்கு உரியன என அடையாளப்படுத்தக்கூடிய நூல்கள் பெரும்பாலும் தமிழில் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுவதுண்டு. அகத்தியர், திருவள்ளுவர், தன்வந்தரி, திருமூலர், போகர், புலிப்பாணி, கம்பளச்சட்டைமுனி, கோரக்கர், மச்சமுனி உள்ளிட்டு சித்தர்களாக அறியப்பட்ட பலரினதும் பெயர்களில் இத்தகைய நூல்கள் கிடைக்கப்பெறுகின்றன. எனினும் சித்தமருத்துவம் தொடர்பான நூல்கள் ஆக்கப்பெற்ற காலப்பகுதி குறித்த ஆதாரபூர்வமான அல்லது நம்பகமான தரவுகள் எதுவும் இற்றைவரை கிடைக்கவில்லை. இன்று கிடைக்கக் கூடிய வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகளின் துணையோடு தமிழில் சித்த மருத்துவ நூல்களின் தோற்றம் பற்றி இக்கட்டுரையில் மீளாய்வு செய்யப்படுகின்றது. அகத்தியர் முதலான சித்தர்களினதும் முனிவர்களினதும் பெயர்களில் அறியப்படும் தமிழ் மருத்துவ நூல்களை அவற்றின் மொழிநடை மற்றும் யாப்பு நிலை என்பவற்றின் அடிப்படையில் மட்டுமன்றி அந்நூல்களில் கிடைக்கப் பெறும் அகச்சான்றுகளின் துணையோடும் ஆராயுமிடத்து இம்மருத்துவ நூல்கள் ஆக்கப்பெற்ற காலப்பகுதியை 16ஆம் நூற்றாண்டுக்கும் 19ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாக உறுதிப்படுத்த முடிகின்றது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles