Siam Death Railway

சயாம் மரண ரயில் – பேரூழியின் நினைவுத்தொழிற்சாலை (நினைவுச்சின்னம் நாவலும் புலம்பெயர் அவலமும் குறித்த ஆய்வு)

Authors

  • Dr. Vetri Selvan Department of Diasporaic Tamil Studies, Tamil University, India

Keywords:

Death rrail, Holocaust Industry, Krutho (Japanese labour agent), Coolie, Bellegra, Eodema, Kambichadakku (Railway track), மரணரயில், நினைவுத் தொழிற்சாலை, மொழி புழங்காற்றல், குருத்தோ, தலைக்கணக்குக் கூலி, பெல்லக்ரா, ஒடிமா, கம்பிச்சடக்கு.

Abstract

World wars took place at the height of the crisis of colonial domination. Japanese imperialism flourished in competition with British imperialism. First, the need for Tamils ​​to emigrate from Tamil Nadu to hundreds of countries, including Malaysia, for the plantation industry of British imperialism was inevitable. Japan, which had infiltrated Southeast Asia during World War II, used the construction of the Siam Railroad as a tactic in the War against the British. Tamils ​​were forcibly deported from the emigration site for the construction of the Siam Death Railway. The plight of the Tamil people’s inexplicable experience is due to repeated forced exoduses. In this work, Japanese imperialism persecuted Europeans, Chinese, Burmese, Siamese, and mostly Tamils. The novel ‘ninaivu chinnam’ (Monument) by A. Rengasamy (Malaysia) depicts this history as a tragic history and narrate the holocaust industry.

காலனி ஆதிக்க நெருக்கடி முற்றிய உச்சத்தில் உலகப்போர்கள் நடந்தன. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குப் போட்டியாக ஜப்பான் ஏகாதிபத்தியம் உருப்பெருக்கமடைந்தது. முதலில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் தோட்டத்தொழிலுக்கு தமிழ் நாட்டிலிருந்து மலேசியா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்ல வேண்டிய தேவை தமிழர்களுக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது. உலகப்போரில் தென் கிழக்கு ஆசியாவுக்குள் புகுந்து ஆட்டம் போட்ட ஜப்பான், ஆங்கிலேயருக்கெதிரான நாடுபிடிக்கும் போரில், சயாம் ரயில்பாதை அமைப்பதைப் போர்த் தந்திரமாக கையாண்டது. தோட்டத்தொழிலுக்காகப் புலம்பெயர்ந்த இடத்திலிருந்து சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் பணிக்கு வலுக்கட்டாயமாக தமிழர்கள் புலம்பெயர்ப்பிக்கப்பட்டனர். மறுபடி மறுபடி நேர்ந்த கட்டாயமான புலப்பெயர்வுகளால் தமிழ் மக்களுக்கு வாய்த்த அவலம் சொல்லிமாளாதது. இந்தப் பணியில் ஜப்பான் ஏகாதிபத்தியம் சிறுபான்மையாக ஐரோப்பியர், சீனர், பர்மியர், சயாமியர் ஆகியோரையும், பெரும் பான்மையாகத் தமிழர்களையும் வதைத்தது. இந்த வரலாற்றை துயரவரலாறாக-நினைவுச்சின்னமாக காட்சிப்படுத்துகிறது, அ.ரெங்கசாமி (மலேசியா) எழுதிய ‘நினைவுச்சின்னம்’ புதினம்

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles