SINGLE JOURNAL BIBLIOMETRIC STUDY OF JOURNAL OF TAMIL PERAIVU

Authors

  • M. Vijayalatchumy | Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • G. Abirami | Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Professor Dr. M. Rajantheran Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Bibliometrics, Authorship pattern, Collaboration coefficient, Publication productivity, Journal of Tamil Peraivu, நூலியல் ஆய்வு, ஆய்வாளர் வகைமாதிரி, கூட்டாய்வுத் திறம், பதிப்பு உற்பத்தி திறன், தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்

Abstract

Journal publications become an essential part of knowledge ecosystem especially towards non-Romanised language and literature studies. Thus, Tamil language journals identified as an unexplored area of research in the field of bibliometric analysis. Therefore, this study establishes the first baseline on bibliometric analysis for the Journal of Tamil Peraivu published between 2015 to 2020. The data was analyzed to build and visualize trends in the field of study's research. Implicitly, they provide evidence for the impact of an individual or field of study's research, and reveal the main development paths of the field, new and emerging areas of research and potential research collaborators. Total of 150 articles were written by 120 authors, primarily in Tamil, and in the Tamil studies used for this study. Findings shows that dynamics of the knowledge ecosystem is emerging and a number of promising areas of studies were explored by handful researchers from local and abroad, enticing new perspectives in the field of journal publication as far as Tamil is concerned, so far.  

 

சமகால மொழி, இலக்கிய ஆய்வுகளுக்கு அறிவார்த்தமான இயக்கவியலை சாத்தியப்படுத்துவதில் ஆய்விதழ்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. தமிழ் ஆய்விதழ்கள் கணிசமான அளவு வெளிவரும் நிலையில் அவை நூலியல் ஆய்வுத் துறையில் கவனம் செலுத்தப்படாத ஆய்வுப் பகுதியாக இதுவரையிலும் இருந்து வந்துள்ளது. எனவே, இந்த ஆய்வு 2015 முதல் 2020 வரை வெளியிடப்பட்ட தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்கான நூலியல் பகுப்பாய்வின் முதல் அடிப்படையை நிறுவுகிறது. தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் கவனம் செலுத்தும் ஆய்வுத் துறையில் உள்ள போக்குகளை அடையாளம் காணவும் காட்சிப்படுத்தவும் பகுப்பாய்வு செய்யவும் தனிநபர் அல்லது குறிப்பிடத்தக்க கல்விக்கூடத்தின் தாக்கத்திற்கான ஆதாரங்களை வழங்கவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விதழில் முக்கியத்துவம் பெறும் ஆய்வுப் துறைகள்; அவற்றின் முக்கிய வளர்ச்சிப் பாதைகள்; புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகள்; மற்றும் சாத்தியமான ஆராய்ச்சி கூட்டுப்பணியாளர்களை தெளிவான புள்ளிவிபரங்களுடன் இவ்வாய்வு வெளிப்படுத்தியுள்ளது. மொத்தம் 150 ஆய்வுக்கட்டுரைகள் 120 ஆய்வாளர்களைக் கொண்டு தமிழியல் துறை சார்ந்து, முதன்மை ஊடக மொழியாக தமிழில் இவ்விதழின் ஆய்வுக்கட்டுரைகள் அமைந்துள்ளன.. தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பிரசுரம் கண்ட கட்டுரைகளின் அறிவு இயக்கவியல் பற்றிய புரிதலை ஏற்படுத்த முனைந்துள்ளதுடன் தமிழ் மொழியைக் கடந்து, அதற்குரிய நிலப்பரப்பைத் தாண்டி பரந்த அணுகல் மற்றும் அறிவைப் பரப்புவதற்கு சாத்தியமான தளங்களை இவ்வாய்வு தனது கண்டடைவாக முன்வைத்துள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles