நற்றிணை நவிலும் வாழ்வியல் சிந்தனைகள்

Life-related thoughts in Nattrinai

Authors

  • Vigneskumar P S.A.Arts and Science College, Tiruverkadu, Chennai

Keywords:

Natrinai, Trust, Ethics, Family Love, Truthfulness, நற்றிணை, நம்பிக்கை, அறநெறி, குடும்ப அன்பு, வாய்மை

Abstract

Natrinai, one of the Ettuthogai texts in Sangam literature that records the cultural history of our ancestors, reveals concepts that refine human life. This article examines the themes of trust, love, and ethical principles found in Natrinai. The unwavering trust between the hero and heroine, and the truthfulness revealed through the phrase 'ninra sollar' (one whose words are steadfast), serve as the foundation of family life. Through the metaphor of a honeycomb, the unity of couples and the nature of noble friendships are explained. The behavior of a wild rooster illustrates family love and economic responsibility. Valuable ethical principles such as keeping one's word, never abandoning righteousness under any circumstance, living with mutual understanding, and learning even from other living beings provide guidance for contemporary society. It is evident that these values offered by Natrinai are highly essential for family life today, especially in an era where materialism has become predominant and qualities like love, understanding, compromise, and altruism between spouses are diminishing.

 

நம் முன்னோர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பதிவுசெய்யும் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை மனித வாழ்வியலைப் பண்படுத்தும் கருத்துகளை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை நற்றிணையில் இடம்பெற்றுள்ள நம்பிக்கை, அன்பு மற்றும் அறநெறிகள் குறித்து ஆராய்கிறது. தலைவன் தலைவியிடம் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையும், 'நின்ற சொல்லர்' என்ற சொல்வழி வெளிப்படும் வாய்மையும் குடும்ப வாழ்வின் அடித்தளமாக விளங்குகின்றன. தேன்கூட்டின் உவமை மூலம் தம்பதிகளின் ஒற்றுமையும் மேன்மக்களின் நட்பின் தன்மையும் விளக்கப்படுகின்றன. காட்டுச் சேவலின் செயல்பாட்டின் மூலம் குடும்ப அன்பும் பொருளாதாரப் பொறுப்பும் எடுத்துரைக்கப்படுகின்றன. சொன்ன சொல்லைக் கடைபிடித்தல், எக்காரணத்தைக் கொண்டும் அறத்தைக் கைவிடாமை, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்தல், பிற உயிர்களிடமிருந்தும் கற்றல் போன்ற மதிப்புமிக்க அறநெறிகள் சமகால சமூகத்திற்கு வழிகாட்டுகின்றன. நற்றிணை வழங்கும் இவ்விழுமியங்கள் இன்றைய குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவை என்பது தெளிவாகிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2025-12-31

How to Cite

P, V. (2025). நற்றிணை நவிலும் வாழ்வியல் சிந்தனைகள்: Life-related thoughts in Nattrinai. Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்), 17, 8–13. Retrieved from https://ejournal.um.edu.my/index.php/JIS/article/view/67686