நற்றிணையில் அற விழுமியங்கள்
Virtues in Nattrinai
Keywords:
Nattrinai, Values, Moral, Importance of Youth, Avoidance of Evil, Hardwork, Humanity, Honesty, Food Sharing, நற்றிணை, விழுமியம், அறம், இளமையின் முக்கியத்துவம், தீமையைத் தவிர்த்தல், விடாமுயற்சி, மனிதநேயம், வாய்மை, பாதீடுAbstract
The good deeds and noble thoughts of ancestors who lived and passed away in every society endure through many ages. Those that have thus endured are revered and followed by people who emerge in later times. Through Sangam literature, we can learn that countless values are embedded as ideas and advice in the words, actions, and thoughts of the people who lived in ancient Tamil Nadu. In Natrinai, one of the Sangam literary texts taken up for study, we can see that ethical concepts, thoughts, and advice appear as values, including: the importance of water, the indispensability of youth, avoiding evil, persevering with effort, treating others with humanity, adhering to truthfulness, and sharing food. The objective of this article is to examine these values in detail and comprehensively, with the aid of encyclopedias, dictionaries, and the statements of scholars.
ஒவ்வொரு சமூகத்திலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நற்செயல்களும், நற்சிந்தனைகளும் காலங்கள் பல கடந்து நிலைபெற்றுவிடுகின்றன. அவ்வாறு நிலைபெற்றவைப் பிற்காலத்தில் தோன்றும் மக்களால் போற்றிப் பின்பற்றப்படுகின்றன. பழந்தமிழகத்தில் வாழ்ந்த மக்களின் சொல்லிலும், செயலிலும், சிந்தனையிலும் எண்ணற்ற விழுமியங்கள் கருத்துகளாகவும், அறிவுரைகளாகவும் இடம்பெற்றுள்ளதைச் சங்க இலக்கியங்களைக் கொண்டு அறியமுடிகின்றது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான நற்றிணையில் நீரின் முக்கியத்துவம், இளமையின் இன்றியமையாமை, தீமையைத் தவிர்த்தல், விடாமுயற்சி செய்தல், மனிதநேயத்துடன் நடத்தல், வாய்மையைக் கடைபிடித்தல், பங்கிட்டு உண்ணுதல் ஆகிய அறம் சார்ந்த கருத்துகளும், சிந்தனைகளும், அறிவுரைகளும் விழுமியங்களாக இடம்பெற்றுள்ளதைக் காண முடிகின்றது. இவ்விழுமியங்களைக் கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், அறிஞர்களின் கூற்றுகள் ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு விரிவான முறையில் விளக்கமாக ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.


