திராவிட சிசுவும் கால வகைப்பாடும்

The Elusive Timeframe of Thirugnanasambandhar

Authors

  • K Subala Avinashilingam Institute for Home Science and Higher Education for Women, Coimbatore, Tamil Nadu.
  • M Geetha Avinashilingam Institute for Home Science and Higher Education for Women, Coimbatore, Tamil Nadu.

Keywords:

Saivam, Thirugnanasambandhar, History, Era, Dravidian Sisu, சைவ சமயம், திருஞானசம்பந்தர், வரலாறு, கால வகைப்பாடு, திராவிட சிசு

Abstract

Religion is defined by belief in a supreme power and its guiding principles. Saivism, considered one of the oldest religions, reveres Lord Shiva as the ultimate deity, promoting a path to enlightenment and a better life. During a period when Buddhism and Jainism dominated Tamil Nadu, often referred to as the 'dark ages,' Thirugnanasambandhar's advent in Sirkazhi marked a turning point. He aimed to revive Saivism and guide people towards a more fulfilling path. However, his life and era remain shrouded in debate, with varying opinions on his incarnation and timeline. This article, 'The Elusive Timeframe of Thirugnanasambandhar,' seeks to reconcile these perspectives and provide clarity on his life and era. The article is structured as follows: Introduction, Tamil Veda and Gnanasambandar, Sambandar's Time Periods, Gnanasambandar's Contemporaries, Dravidian Sisu's Time, and Conclusion.

 

கடவுள் நம்பிக்கையும் அதன் கொள்கைகளும் சமயம் என்று வரையறுக்கப்படுகின்றது. உலகில் தோன்றிய சமயங்களில் பழமையானதாகக் கருதப்படும் சைவ சமயம், சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடப்படுகின்றது. சைவ சமயம் மனிதர்களை நல்வாழ்விற்கு நெறிப்படுத்தி பண்படுத்துகின்றது. தமிழகத்தில் பிற சமயங்களான பௌத்தமும் சமணமும் மேலோங்கி வளர்ந்த காலத்தினை தமிழகத்தின் இருண்ட காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர். இக்காலச் சூழலை மாற்றியமைத்து மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவும், சைவ சமயம் மேன்மையடைவதற்காகவும் சீர்காழிப் பதியில் திருஅவதாரம் புரிந்தவர் திருஞானசம்பந்தர் ஆவார். இப்பெருமகனாரின் அவதாரம் மற்றும் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதைக் காணமுடிகின்றது. இக்கருத்துக்களின் முடிவுகளைத் திருஞானசம்பந்தரின் காலம் என்ற அடிப்படையில் இக்கட்டுரை நிறுவுகின்றது. 'திராவிட சிசுவும் கால வகைப்பாடும்' என்ற தலைப்பிலான இக்கட்டுரை முன்னுரை, தமிழ்வேதமும் ஞானசம்பந்தரும், சம்பந்தரின் காலமும் கருத்துக்களும், ஞானசம்பந்தரின் சமகாலத்தவர்கள், திராவிட சிசுவின் காலம் ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் ஆராயப்பட்டுள்ளது. கட்டுரையின் நிறைவாக முடிவுரை வழங்கப்படுகின்றது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2025-12-31

How to Cite

Subala, K., & Geetha, M. (2025). திராவிட சிசுவும் கால வகைப்பாடும்: The Elusive Timeframe of Thirugnanasambandhar. Journal of Indian Studies (இந்திய ஆய்விதழ்), 17, 28–33. Retrieved from https://ejournal.um.edu.my/index.php/JIS/article/view/67693