முகவுரை

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வருடாந்திர வெளியீடு இந்திய ஆய்விதழ். இவ்வாய்விதழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விரிவுரைஞர்கள் தங்களது ஆய்வுப்படைப்புகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்கும் தடமாக அமைகின்றது. சிறந்த ஆய்வு மனப்பாங்கோடு உருவாக்கப்பட தரமிக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுந்து பதிவுசெய்து, கல்வியுலகிற்கு அவற்றைப் பதிவுசெய்யும் முயற்சிக்கு இவ்வாய்விதழ் வழிவகுத்துக் கொடுக்கின்றது. மலேசிய மண்ணிலும், பிற இடங்களிலும் இந்தியர், தமிழ், தமிழர், அவர்தம் வாழ்வியல் அமைப்பு, மாற்றம், எழுச்சி ஆகிய நுண்ணியப் பார்வையினை வெளிக்கொணரும் நல்ல கட்டுரைகளைப் பிரசுரிப்பது இவ்வாய்விதலின் முதன்மை நோக்கமாகும். தேசிய மொழியான மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுத்தப்பட்ட அத்தகைய தரமிக்க கட்டுரைகள் இவ்வாய்விதழில் பிரசுரிக்கப்படுகின்றன.

இந்திய ஆய்வியல் துறையின் கல்வி வளர்ச்சிப்பணியில் ஒரு மைல்கல் இந்திய ஆய்வியல் இதழ். கல்விமான்களும் துறையில் மேற்கல்விபயிலும் ஆய்வுமாணவரிகளும், பிறரும் தமது சிந்தனைக்கருவில் உதித்த உயர்சிந்தனைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள தடம் வழங்கும் இடமிது. சிந்தனைமடல்களில் மலர்ந்த சிந்தனைக்கருக்கள் தம்மையும், தம் சமுதாயத்தையும், தம்தேசத்திற்கும் நன்மைபயக்கும் வண்ணம் அமைந்திடுவது மிகைமுக்கியமாகிறது. இக்கருத்துகள் பொதுவில் இரு பணிகளைச் செய்யும்; ஒன்று, தமது கருத்துகளைப் பிறரோடு பகிந்துகொள்ள உதவுதல்; மற்றொன்று, தமது கருத்துகளைப் பதிவுசெய்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லுதல். இவ்விரண்டு செயல்களும் கல்வியுலகில் காலங்காலமாக நடந்துகொண்டு வருகின்றன. இம்முயற்சிகள் தடைபடுமாயின், சமுதாயத்தின் வளர்ச்சியும் ஏதோ ஒரு வகையினில் தடைபடுவதாகவே பொருளாகும்.

 à®‡à®¨à¯à®¤à®¿à®¯ ஆய்விதழ் புதிய உத்வேகத்துடன் வளர, இந்த 10-ஆவது ஆய்விதழ் தடமமைத்துள்ளது. தமிழ்ச்சிந்தனைகளுக்கும் இந்தியச் சிந்தனைகளுக்கும் இடமளிக்கும் வண்ணம் இவ்விதழ் தமிழ்-ஆங்கிலம் என இருமொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழர் மற்றும் இந்திய வம்சாவளியினர் என இருசாராரது மொழி, இலக்கியம், கலைகலாச்சாரம், சமயம் பண்பாடு, நாகரிகம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சித்தவைத்தியம், ஆயுர்வேதம் என எல்லைக்குட்பட்ட சிந்தனைகளையும், உலக நாகரிகங்கள் பிறவற்றுடன் இணைத்தும் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றையும் இவ்விதழ் பிறசுரிக்கும். தமிழரின் சிந்தனைச்சிறப்புகளையும் சித்தாந்தங்களின் சிறப்புகளையும் வெளியுலகிற்குக் காட்டும் வண்ணம் இவ்விதழில் இடம்பெறும் கட்டுரைகள் இருப்பதனையும், அவற்றின் ஆய்வுத்தரமும் நிறைவாக இருப்பதனையும் இவ்விதழ் இனிவரும் காலங்களில் மிகுவாக உறுதிசெய்யும்.

 à®‡à®•à¯à®•à®¾à®²à®ªà¯à®ªà®•à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ உலகெங்கும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ்-இந்திய சார்பு ஆய்வுகள் நடந்த வண்ணமாக உள்ளன; அவற்ரையும் நம்மோடு இணைத்து வளர இவ்விதழ் வாய்ப்பளிக்கும். ஆசிய-ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்-இந்தியத் துறைச்சார் அறிஞர்களின் கருத்துகளையும் பதிவுசெய்யும் தடமாக உருமாற்றிட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்வழி உலகெங்கும் நடைபெறும் தமிழ்தொடர்பான ஆய்வுகள் நடைபெறுவதற்கும் தமிழறிஞர்கள் கருத்துப்பரிமாற்றங்கள் செய்வதற்கும் நல்லதொரு களம் உருவாக்கப்பட்டுள்ளது எனப் பெருமைகொள்ளலாம். தமிழ்-இந்திய அறிஞர்களிடையே ஆக்ககரமான கலந்துரையாடல் நடைபெறுவதற்கு இத்தடம் வலிமைசேர்க்கும் என்பது திண்ணம்.

 à®‡à®¨à¯à®¤à®¿à®¯ ஆய்வியல் துறையின் பாரம்பரியத்தில் இவ்விதழ் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1980-களில் முதல் இதழ் வெளியீடு கண்டது முதல் இன்றுவரை (37 ஆண்டுகள்) 10 இதழ்களே வெளிவந்துள்ளன. தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து, இவ்விதழ் சிறப்புப்படைப்புகளை ஏந்தி வெளிவரும் ஓர் இதழாக அமைந்துள்ளது. இவ்விதழில் 10 ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன; மொழி, இலக்கியம், சமயம், மொழியியல் எனப் பன்முக ஆய்வுப்படைப்புகளின் முக்கியக் கண்டுபிடிப்புகள் இவ்விதழின் மூலம் பதிவுசெய்யப்பட்டு, வெளியுலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்திய ஆய்வியல் துறையில் ஆய்வுப்பாரம்பரியத்தில் பாதைநெறிகளையும் காட்டும் வண்ணம் அமைந்துள்ளது என்பதும் திண்ணம்.

 à®‡à®¨à¯à®¤ ஆண்டுமுதல் இந்திய ஆய்விதழ் (2018) மின்னியல் ஆய்விதழாகவும் பதிவேற்றம் காண உள்ளது. இதன்வழி உலகெங்கங்கும் இருக்கும் தமிழ்-இந்திய ஆர்வலர்கள் இம்மடலினைப் பயன்படுத்தும் நிலைக்கு வாய்ப்புகள் உருவாகி உள்ளது. எனினும், கடந்த 10 ஆண்டுகளாகத் தடைபட்டு இருந்த இதன் வெளியீட்டுத்தடைகளைக் களைந்து, கல்வியுலகில் புதிய பரிணாமத்தில் வளர மீண்டும் மலர்ந்த இவ்விதழின் இளமை எக்காரணத்திற்காகவும் என்றென்றும் இழக்காமல் காக்க எம்துறையினர் பெருஞ்சிரத்தையைச் செலுத்துவர் என எதிர்பார்க்கின்றேன்; நாம் வீழ்ந்தாலும் தமிழ் வளரவேண்டும் என்பதனைச் சொல்லினால் அல்லாமல் செயலில் பதித்து செயல்படுத்துவோம்.

 

இவ்விதழில் வெளிப்படுத்தப்படும் கட்டுரைக்கருத்துகள் பதிப்பாசிரியர் குழுவின் கருத்துகளாகவோ இந்திய ஆய்வியல் துறையின் கருத்துகளாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. 

மலாயாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மேற்பார்வையில் இயங்கும் நாட்டுக்கோட்டைச் செடியார் அறக்கட்டளை வாரியம் இவ்விதழ் வெளிவருவதற்கான மானியத்தினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

 

இக்கன்,

முனைவர் மோகன தாஸ் ராமசாமி

தலைமைப் பதிப்பாசிரியர்

இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம்

ஏப்பிரல் 2018.