ஜெர்மனி ஃப்ராங்கன் கல்வி நிறுவனத்தின் தமிழ் ஓலைச்சுவடி மற்றும் காகித ஆவணங்கள் கூறும் செய்திகள் (The records of Halle Franckeischestifftung (Germany) Tamil palm leaves and paper manuscript collections)

Authors

  • Subashini Kanaga Kanagasundaram, Dr. Tamil Heritage Foundation

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no2.12

Keywords:

Francke Foundations, Paper manuscripts, Palm Leaves, Germany, Lutheran protestant Missionaries, Tranquebar, Schultze, Dr.August Hermann Francke, B.Ziegenbalg, ஃப்ராங்கன் கல்விக்கூடம், காகித ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், ஜெர்மனி, சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்க, தரஙம்பாடி, டாக்டர்.ஆகஸ்ட் ஃப்ராங்க.

Abstract

Abstract
The Francke Foundations in Halle Germany, founded in 1695 by Dr.August Hermann Francke, supported the Danish crown by providing missionaries to spread the Gospels and Lutheran protestant religion in Tranquebar, TamilNadu. In 1620 AD, an agreement was signed between the Raghunatha Nayak of the Tanjore Nayak Kingdom and Danish Admiral Ove Gjedde, on behalf of the King of Denmark. With this agreement, the village of Tranquebar was acquired by the Danes for an annual fees. B.Ziegenbalg, the first missionary to Tranquebar, established the Tranquebar Mission in 1706, setup the first press in India at Tranquebar, Tamil Nadu. The beginning of Lutheran missionary activities at Tranquebar lead to active Tamil connections between Tamil Nadu and Europe, particularly Germany, Denmark and England. The Palmleaf Manuscript Archive at the Francke Foundations in Halle, is one of the largest collection of its kind in Europe and holds around 270 manuscripts with more than 35,000 single palm leaves sheets and hundreds of Tamil paper manuscripts. This article examines selected number fo Tamil palm leaves and paper maniscripts from the archives of Francke Foundations in Halle, Germany and set path to further research in this area to study and understand the social system, culture, history and life style of Tamils and Tamil Nadu that has significat potentials in filling the gaps in the Tamil Nadu history.
Key Words: Francke Foundations, Paper manuscripts, Palm Leaves, Germany, Lutheran protestant Missionaries, Tranquebar, Schultze, Dr.August Hermann Francke, B.Ziegenbalg

கட்டுரைச் சுருக்கம்

ஜெர்மனியில் உருவாக்கம் கண்ட சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்கள் இந்தியாவில் முதலில் அறிமுகமாக நுழைவாயிலாக இருந்தது  தமிழகத்தின் தரங்கம்பாடி.  தரங்கம்பாடியில் கி.பி 17ம் நூற்றாண்டு தொடங்கிய ஐரோப்பியர் வருகையைப் பதிவு செய்த ஆவணங்கள்,  அக்காலத்து வரலாற்று நிகழ்வுகளை இன்று புரிந்து கொள்ள உதவும் முக்கியச் சான்றுகளாக ஆய்வாளர்களுக்கு அமைகின்றன.  இந்த வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வின் பின்னனி ஜெர்மனியின் கிழக்குப் பகுதி நகரமான ஹாலே ஃப்ராங்கன் கல்விக்கூடத்துடன் (Francke Foundations (Franckesche Stiftungen))  நெருங்கிய தொடர்பு கொண்டது. ஹாலே ஃப்ராங்கன் கல்விக்கூடம் 1695ம் ஆண்டு பேராசிரியர் டாக்டர். ஆகஸ்ட் ஃப்ராங்க அவர்களால் கிழக்கு ஜெர்மனியின் ஹாலே நகரில் தொடங்கப்பட்டது. கி.பி 1620ம் ஆண்டில் அன்று தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ரகுநாத நாயக்கருக்கும் டேனீஸ் அரச பிரதிநிதி அட்மிரல் ஓவே ஜெட் அவர்களுக்கும் இடையே தரங்கம்பாடிய டேனீஷ் அரசு வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் ஒரு ஒப்பந்தம் தங்கச்சுவடியில் கையெழுத்திடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தன. பின்னர் சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்களைப் பரப்புவதற்காக மறைபரப்பும் பணியாளர்கள் ஜெர்மனியில் இருந்து தமிழகத்தின் தரங்கம்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த முயற்சி தமிழகத்திற்கும் ஜெர்மனிக்குமான தொடர்பிற்கு அடித்தளம் அமைத்தது.  ஐரோப்பிய குருமார்கள் தாமே தமிழ் கற்று எழுதிய ஓலைச்சுவடிகள். ஓலைச்சுவடி வடிவில் நாட்குறிப்புச் செய்திகள், காகித ஆவணங்கள், தரங்கம்பாடி, மெட்ராஸ், கடலூர் ஆகிய பகுதிகளில் தமது நடவடிக்கையை விவரிக்கும் அறிக்கைகள், என இவை அனைத்தும் தமிழில் ஜெர்மானிய பாதிரிமார்களால் இன்றைக்கு 300 ஆண்டுகள் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன. இந்த ஃப்ராங்கன் கல்விக்கூடத்தில் இன்று 270க்கும் மேற்பட்ட தமிழ்ச்சுவடி நூல்கள், அதாவது ஏறக்குறைய 35,000 ஓலைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஆய்வுக் கட்டுரை ஃப்ராங்கன் கல்விக்கூடத்தின் அரிய சுவடிகள் ஆவணப்பாதுகாப்பகத்தில் உள்ள குறிப்பிட்ட சில தமிழ்ச்சுவடி நூல்களை ஆய்வு செய்கின்றது. இதன் வழி தமிழக வரலாற்றின் விடுபட்ட சில செய்திகளை கூறுவதாகவும் இதன் தொடர்ச்சியாக செய்யப்பட வேண்டிய ஆய்வுகள் பற்றியும் இந்த ஆய்வுக் கட்டுரை விவரிக்கின்றது.

 

கருச் சொற்கள்: ஃப்ராங்கன் கல்விக்கூடம், காகித ஆவணங்கள், ஓலைச்சுவடிகள், ஜெர்மனி, சீர்திருத்த கிருத்துவ சமய கருத்தாக்கங்க, தரஙம்பாடி, டாக்டர்.ஆகஸ்ட் ஃப்ராங்க.                                

 

Downloads

Download data is not yet available.

Author Biography

Subashini Kanaga Kanagasundaram, Dr., Tamil Heritage Foundation

The author is an IT Architect, DXC Technology & President of Tamil Heritage Foundation (International Organization for Preserving Tamil Heritage).

Downloads

Published

2018-12-28

Issue

Section

Articles