மலேசியத் தமிழரிடையே குலதெய்வ வழிபாடு : தோற்றமும் தொடர்ச்சியும் (Origin and the Development of Family Deity Worship Among Malaysian Tamils)

  • Manimaran Subramaniam, Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Sivapalan G, Mr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Rajantheran M, Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Abstract

This essay explores the folk deity worship heritage, religious background of Malaysian Tamils, background of folk deity worship in Malaysia, reason for the worship, the method of worship, the problems and challenges faced by Malaysian Tamils in relation with worship, which are common in Malaysian Tamil religious worship. The field work for this essay was based on Malaysia’s Selangor state and Kuala Lumpur Federal Territory. Data for this essay is also obtained via library research, interview and field research. Qualitative research is used for this article analysis. Based on the above analysis method, this essay is written in a descriptive mode. Through this article, the study identified some end results. The research identified that the origin of worship of the folk deity of Malaysian Tamil is the convention on the ancient Tamil. Since the day of immigrant Tamils to Malaya, their optimism has associated with their life till to date. The underlying cause of the folk deity worship is for the search of protection. The worship of folk deity has been essentially unchanged from the conventional method. Nevertheless, as the time passes, the change in economic condition and context of life brought in various extensions to folk deity worship. Following this, the folk structured worship methods started to accept the methods of agamic. The change of residence and the condition to live together with multi-ethnic society led to various problems. These problems require the involvement of the police, Municipal and also legal proceedings. However, because Malaysian Tamils perceived the problems, the worship of folk deity is being continued without any flaws.


 


Keywords:


 


Malaysian Tamils, Tamils belief system, Malaysian Hindus, Tamil folk deities, domestic shrine.


 


ஆய்வுச் சுருக்கம்:


மலேசியத் தமிழர்களிடையே காணப்படும் சமய வழிபாட்டில் பரவலாக இடம்பெற்று வரும் குலதெய்வ வழிபாட்டின் மரபையும், மலேசியத் தமிழர்களின் சமயப் பின்புலத்தையும், மலேசியாவில் குலதெய்வ வழிபாட்டின் பின்புலத்தையும், இவ்வழிபாட்டுக்கான காரணங்களையும், வழிபாடு மேற்கொள்ளப்படும் முறையையும், இவ்வழிபாட்டின் தொடர்பில் மலேசியத் தமிழர்கள் எதிர் நோக்கும் சிக்கல்களையும் சவால்களையும் இக்கட்டுரை ஆராய்கிறது. இக்கட்டுரைக்கான களப்பணிகள் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம், கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. கட்டுரைக்கான தரவுகள் நூலக ஆய்வு வழியாகவும், நேர்காணல் மற்றும் கள ஆய்வு வாயிலாகவும் பெறப்பட்டன. இக்கட்டுரைக்கான ஆய்வு பண்புசார்(qualitative) அணுகுமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆய்வு நெறியை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுத்தல் (descriptive) முறையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் ஆய்வின் வாயிலாக சில கருத்து முடிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மலேசியத் தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டின்  தோற்றம் பழந்தமிழர்களின் மரபை அடியொட்டி வந்திருப்பது ஆய்வின் வழி அறியப்படுகின்றது. மலாயாவுக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்த காலந்தொடங்கி இந்நம்பிக்கை அவர்களின் வாழ்வியலோடு கலந்து இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. குலதெய்வ வழிபாட்டுக்கான அடிப்படைக் காரணமாக காவல் தேடுதல் அமைந்துள்ளது. இவர்களது குலதெய்வ வழிபாட்டு முறைகள் அடிப்படை மரபு முறையிலிருந்து மாறாமல் இருந்து வருகின்றன. இருந்தபோதிலும் காலமாற்றத்தினால் ஏற்பட்ட பொருளாதார நிலை மாற்றமும், வாழ்வியல் சூழல் மாற்றங்களும் குலதெய்வ வழிபாட்டிடங்களில் பல்வேறு விரிவாக்கங்களைக் கொண்டு வந்து சேர்த்தன.   இதனைத் தொடர்ந்து  நாட்டுப்புற அமைப்பிலான இவ்வழிபாட்டு முறைகளில் ஆகம முறைகளும் மெல்லக் கலந்தன. இருப்பிட இடமாற்றங்களும் பல்லின மக்களுடன் இணைந்து வாழும் சூழலும் வழிபாட்டு முறையைத்தொட்டு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவிட்டன. இச்சிக்கல்கள் காவல்துறை, மாநகராட்சியின் தலையீட்டுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் இட்டுச் செல்லும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளன.  எவ்வாறாயினும் சிக்கல்களை மலேசியத் தமிழர்கள் உணர்ந்து கொண்ட காரணத்தால் குலதெய்வ வழிபாடு எவ்விதத் தொய்வுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.


 


குறிப்புச் சொற்கள்:


மலேசியத் தமிழர், தமிழர், நம்பிக்கை, மலேசிய இந்துக்கள், தமிழர் குலதெய்வங்கள், நாட்டுப்புறக் கோவில்.

Author Biographies

Manimaran Subramaniam, Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Manimaran Subramaniam is a Senior Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Sivapalan G, Mr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Sivapalan is a Senior Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Rajantheran M, Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Professor Dr. M.Rajantheran is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Published
2016-12-25
How to Cite
SUBRAMANIAM, Manimaran; G, Sivapalan; M, Rajantheran. மலேசியத் தமிழரிடையே குலதெய்வ வழிபாடு : தோற்றமும் தொடர்ச்சியும் (Origin and the Development of Family Deity Worship Among Malaysian Tamils). Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), [S.l.], v. 4, n. 1, p. 40-50, dec. 2016. ISSN 2636-946X. Available at: <https://tamilperaivu.um.edu.my/article/view/14137>. Date accessed: 21 nov. 2019. doi: https://doi.org/10.22452/JTP.vol4no1.4.
Section
Articles