சிலப்பதிகாரபுத்தாக்கவடிவங்களும்அவற்றின்புனைவுகளும் (Inventions of Silappathikaram and their Legends)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no1.1Keywords:
Kannaki, Kovalanar Kathai, Silampukural, Kannaki Vazhakurai, communityAbstract
The Silappathikaram was revived since Vijaya Nagara Nayakkar period contemporary situations. Particularly in Tamil Nadu, Kerala and Sri Lanka the story of the Kannaki has been revived according to its local environment and culture. During the Vijaya Nagara Nayakkar period in Tamil Nadu the story of the Silappathikaram become a ballad called ‘Kovalan Kathai’. Later, a number of ballads such as Kovalan Karnaki Kathai, Kovilan Sariththiram, Karnaki Mathanalki Kovilar Kathai emerged in Tamil Nadu.
All these ballads created Kannaki the goddess of Saivism. In the Kovilan story, Kannaki is structured as a form of goddess Thurkka and as a goddess Kali to avenge the King Pandian. In addition, these stories have been created as a collection of region cases and traditions of the Peoples of the land in which the originated. These revivals have been made of mythical legends. In the Kannaki Vazhakurai which originated in Sri Lanka, The story has been fabricated the sprite called Namankalai comes in the form of a mango and She births as a goddess Kannaki. Its alternate forms, the Kovalanar Kathai and Silampukural are presented that goddess Kali comes in the form of mankani (mango) and she births as a goddess Kannaki. These Sri Lankan Texts were created for the sake of Kannaki ritual.
The Kappal vaiththa (Shipping) Kathai and Kadaloddu (diving) Kathai of Kannaki Vazhakurai tells about the myth of Sri Lanka. Kadaloddu Kathai tells about the story of a Vediyarasan. This story reveals eminence of the history of a community (particularly caste) of Tamils in Sri Lanka.
சிலப்பதிகாரம் விசயநகர நாயக்கர் காலம் முதல் சமகாலச் சூழல்களுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பாக தமிழகம், கேரளம், இலங்கை ஆகிய நாடுகளில் அவ்வப் பிரதேச சூழலுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப கண்ணகி கதை மீளுருவம் பெற்றது. தமிழகத்தில் விசயநகர நாயக்கர் காலப்குதியில் சிலப்பதிகாரக் கதை 'கோவிலன் கதை' என்ற கதைப்பாடலாக உருவானது. பின்னர் 'கோவலன் கர்ணகை கதை', 'கோவிலன் சரித்திரம்', 'கர்ணகி மாதநல்கி கோவிலர் கதை' எனப் பல கதைப்பாடல்கள் தமிழகத்திலே உருவாயின.இந்தக் கதைப்பாடல்கள் எல்லாம் கண்ணகியைச் சைவ மதம்சார் தெய்வமாகக் கட்டமைத்தன. கோவிலன் கதையில் கண்ணகி துர்க்கையின் வடிவமாகவும் பாண்டியனைப் பழிவாங்க வந்த காளியாகவும் கட்டமைக்கப்படுகின்றாள். அத்தோடு இந்தக் கதைகள் அவை உருவான நிலப்பரப்பு சார்ந்த மக்களின் வட்டார வழக்குகள், மரபுகளை உட்கொண்ட படைப்புகளாகவும் உருவாக்கப்பட்டன. இந்த மீளுருவாக்கங்கள் ஐதீகப் புனைவுகள் மூலம் செய்யப்பட்டுள்ளன.ஈழத்திலே தோன்றிய கண்ணகி வழக்குரையில் நாமங்கலை என்ற அணங்கு மாங்கனி வடிவில் வந்து கண்ணகி அம்மனாக அவதரிப்பதாகப் புனையப்பட்டுள்ளது. அதன் மாற்று வடிவங்களாக அமையும் 'கோவலனார் கதை' 'சிலம்புகூறல்' என்பன காளி மாங்கனி வடிவில் வந்து கண்ணகியாக அவதரிப்பதாகக் காட்டுகின்றன. இந்த ஈழத்துப் பிரதிகள் கண்ணகி சடங்கின் நிமிர்த்தம் உருவானவை.கண்ணகி வழக்குரையின் கப்பல் வைத்த காதை, கடலோட்டு காதை ஆகியன இலங்கைநிலைப்பட்ட ஐதீகங்களை எடுத்துக் கூறுகின்றன. கடலோட்டு காதை வெடியரசன் பற்றிய கதையைக் கூறுகின்றது. இக்கதை இலங்கைத் தமிழரிடையே காணப்படும் ஒரு சமுதாயப் பிரிவினரின் வரலாற்றுச் சிறப்பைக் காட்டுவதாகும்.ஆகவே, சிலப்பதிகாரப் புத்தாக்க வடிவங்கள் பிரதேச நிலைப்பட்ட சைவமத பக்தியிலக்கியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன.