தமிழ்க் கற்பித்தல்: உள்ள பொருளும் உண்மைப் பொருளும் (Teaching Tamil: Present Condition and Real Approach)

Authors

  • Mohan P., Associate Professor Tamil Department, Vels University, Chennai, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.7

Keywords:

Tamil teaching, language training, Tamil Life, Tamil Culture, Cultural teaching, Cultural Linguistics, Tamil Identities., தமிழ்க் கற்பித்தல், மொழிப் பயிற்சி, தமிழ் வாழ்வு, தமிழ்ப் பண்பாடு, பண்பாட்டியல் கற்பித்தல், பண்பாட்டு மொழியியல், தமிழ் அடையாளங்கள்.

Abstract

Enabling a person to read and write in Tamil and teaching grammar to obtain these two skills are the components entailed in language training at present. Knowing the structure of Tamil language, understanding the grammar of it and developing it to the necessities of modern technological growth are the needs of the hour. Undoubtedly, with these efforts, Tamil language can be inherited by the future generations. However, the possibility of a full-fledged teaching of Tamil language using the previously mentioned methods remains unseen. To achieve this possibility, teaching the life of Tamils becomes the real way of teaching Tamil language. This includes all that are created in Tamil such as literature, arts, civilization, culture, educational system, ethics, science, politics, medicine, and technology. This is not a novel practice since the Sangam poet Kabilar taught the Aryan King Brihadatthan Tamil language via Kurinji Paatu (Agam poetry), which was written by Kabilar himself. As globalization has intruded into the lives of all the ethnic nationalities that resulted in the people losing their identities, there is a pressing demand to shape our training and learning approach based solely on our cultural ground. This article is written to prove the point that teaching Tamil means teaching life and culture of Tamils.

தமிழ் மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பதும், அதற்கேற்ப இலக்கணத்தைக் கற்றுக் கொடுப்பதும் மொழியைப் பயிற்றுவித்தல் என்று தற்காலத்தில் அழைக்கப்படுகின்றது. தமிழ் மொழியின் அமைப்பை அறிந்துகொள்வதும், அதன் இலக்கணத்தைப் புரிந்துகொள்வதும், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏதுவாக வளர்த்தெடுப்பதும் இன்றைய உடனடித் தேவை என்பதில் சிறுதும் ஐயமில்லை. இச் செயல்பாடுகள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியைக் கடத்தலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.இவற்றினால் தமிழை முழுமையாகக் கற்பிக்க முடியுமா?என்பதே கேள்வி. தமிழைக் கற்பித்தல் என்பதற்கு, தமிழருடைய வாழ்க்கையைக் கற்பித்தல் என்பது பொருள். தமிழ்மொழியைக் கொண்டு உருவாக்கிய இலக்கியங்கள், கலைகள், நாகரிகம், பண்பாடு, கல்வி முறை, அறவியல், அறிவியல், அரசியல், மருத்துவம், தொழில்நுட்பம் முதலானவற்றைக் கற்பித்தல் என்பது பொருள். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழைக் கற்பிக்கும் பொருட்டு, கபிலர் குறிஞ்சிப்பாட்டு என்னும் அகத்திணை நூலைப் பாடினார் என்பதும் இதன்பாற்படும்.தற்காலத்தில், உலகமயமாக்கலின் காரணமாகத் தேசிய இனங்கள் தங்களின் அடையாளத்தை இழந்துவருவதாகக் கருதுகின்றன.இந்நிலையில், நம் பண்பாட்டிலிருந்தே நம் கற்கை நெறியை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழ்மொழியைக் கற்பித்தல் என்பது, தமிழரின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் கற்பித்தல் என்னும் கருத்தை மெய்ப்பிக்க்கும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

 

Downloads

Download data is not yet available.

Author Biography

Mohan P., Associate Professor, Tamil Department, Vels University, Chennai, Tamil Nadu, India.

The author is an Associate Professor in Tamil Department, Vels University, Chennai, Tamil Nadu, India.

Downloads

Published

2020-07-20

Issue

Section

Articles