மலேசியாவில்சித்தமருத்துவமும்அதன்நிகழ்காலப்போக்குநிலையும் (Siddha Medicine and Its Current Status In Malaysia)
DOI:
https://doi.org/10.22452/JTP.vol9no1.10Keywords:
Siddha medicine, Siddha practitioners,Complementary and alternative medicines, Malaysian Tamils, Herbal medicine., சித்த மருத்துவம், சித்த மருத்துவர்கள், மாற்றுமுறை மருத்துவம், மலேசியத் தமிழர்கள், மூலிகை மருத்துவம்Abstract
The main aim of this article is to introduce Siddha medicine and to explore its past and present relationships with Malaysian Tamils. Library research and interviews are employed in order to collect data. The ancient art of Siddha medicine and its unique approaches in treatments are highlighted through this research. It is also noted that Tamils who have migrated to other countries have also implemented this art in those countries. Siddha medicine’s spread to the South East Asia can be traced back to the trade and social relations between these countries and India. In Malaysia, Siddha medicine’s origins can mainly be traced to rubber plantations which homed Tamils; they nurtured the art of Siddha medicine through their dietary habits and Siddha medicine practitioners. This research also denotes that the decline of the implementation of this art is in parallel with the mass migrations of Tamils out of rubber plantations. Despite the challenges faced by Siddha medicine in Malaysia recently, there is still a glimmer of hope with the upcoming Siddha practitioners. In conclusion, this article deduces that Siddha medicine in Malaysia is heavily influenced by the lifestyle and environment of Tamils.
மலேசியாவில் சித்த மருத்துவமும் அதன் நிகழ்காலப் போக்கு நிலையும் எனும் தலைப்பிலான இக்கட்டுரை,சித்த மருத்துவத்தின் அறிமுகத்தையும், மலேசியத் தமிழர்களுக்கும் சித்த மருத்துவத்துக்கும் இடையிலான தொடக்ககால உறவையும் அதன் நிகழ்காலப்போக்கு நிலையையும் ஆராயும் நோக்கத்தில் உருவானது. இக்கட்டுரைக்கான தரவுகள் நூலக ஆய்வு, நேர்காணல்முறையில் திரட்டப்பட்டன. திரட்டப்பட்டத் தரவுகளை ஆராய்ந்தபோது சித்த மருத்துவம் காலத்தால் மிகத் தொன்மையானது என்பதும் தனக்கென மிகத் தெளிவான மருத்துவக்கோட்பாடுகளைக் கொண்டது என்பதும் தெரிய வருகின்றது. தமிழகத்திலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் சித்த மருத்துவம் வேரூன்றியுள்ளதையும் மலேசியாவுக்கும் சித்தமருத்துவத்துக்குமான தொடர்பு, இந்தியாவுக்கும் தெற்கிழக்காசிய நாடுகளுக்குமிடையே வணிகத்தொடர்பும் அதன்வழி பண்பாட்டுத் தொடர்பும் ஏற்பட்டக் காலந்தொடங்கி இருந்து வருவதையும் ஆய்வு புலப்படுத்துகின்றது. மலேசியத்தோட்டப்புறங்களில் தமிழர்கள் வாழ்ந்தபோது சித்த மருத்துவம் அவர்களின் உணவு முறையின் வாயிலாகவும் சித்த வைத்தியர்களின் வைத்தியத்தின் வாயிலாகவும் வளர்ந்துள்ளதையும் தோட்டப்புற வாழ்க்கை முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களின் சித்த மருத்துவ வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டதையும் ஆய்வின் முடிவு காட்டுகின்றது. தற்போது மலேசியாவில் சித்த மருத்துவம் ஒருபுறம் சவால்களை எதிர்கொண்டு வந்தாலும் பிறிதொரு புறம் நல்ல ஏற்றத்தையும் கண்டுவருவதை இக்கட்டுரையின் வழி அறியமுடிகின்றது. மலேசியாவில் தமிழர்களின் வாழ்க்கைச் சூழலும் வாழிடச் சூழலும் சித்த மருத்துவத்தின் போக்கு நிலையை முடிவு செய்துள்ளன என்பது இக்கட்டுரையின் திரண்ட கருத்து முடிபாகும்.