நற்றிணைப் புலவர் பெயர் எண்ணிக்கை வேறுபாடுகளும் சிக்கல்களும் (Variance of Poet counts of the text Natrinai and Related Issues)

Authors

  • Dr.R.Anandha kumar Kumar Dr.R.Anandhakumar

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.10

Keywords:

சங்க இலக்கியம், நற்றிணை, புலவர்கள், அ.நாராயணசாமி ஐயர் (1915), எஸ்.வையாபுரிப்பிள்ளை (1940), ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை (1966 & 1968), ஏவா வில்தன் (2008).

Abstract

தமிழ் இலக்கியங்களுள் மிகவும் தொன்மையான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். அச்சங்க இலக்கியங்களுள் நல் என்ற சிறப்பு அடைபெற்ற நற்றிணை முதல் நூலாகக் கருதப்படுகிறது. 400 பாடல்களைக் கொண்ட இந்நூலில், 175 புலவர்களின் பாக்கள் காணப்படுவதாக பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரின் முதற்பதிப்பில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர் வரலாற்றுப் பகுதியின் மூலம் அறியமுடிகிறது. ஆனால் அதற்குப் பிறகு வந்த பல்வேறு பதிப்புகளிலும் ஆய்வு நூல்களிலும் நற்றிணையைப் பாடிய மொத்த புலவர்களின் (மொத்த புலவர்கள்  175, 176, 187, 192) எண்ணிக்கைகள் வேறுபடுகின்றன. ஆகவே அப்புலவர்களின் எண்ணிக்கை வேறுபாடுகளுக்கான காரணங்களையும்  பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1915), எஸ். வையாபுரிப்பிள்ளை (1940),  ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (1966 & 1968), ஏவா வில்தன் (2008) ஆகியோரின் பதிப்புகளில் காணப்படும்  புலவர் பெயர்களின் சிக்கல்களையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. மேலும் சங்க இலக்கியத்தைப் பாடிய மொத்த புலவர்களாக 473 பேர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் அப்புலவர்களின் எண்ணிக்கைக்குள் வராத 53 புலவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டும், சங்க இலக்கியத்தைப் பாடிய மொத்தப் புலவர்களின்  எண்ணிக்கைக்குள் அவர்கள் ஏன்  வரவில்லை என்ற காரணத்தையும் எடுத்துக்காட்டு வதாகவும் இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-20

Issue

Section

Articles