இந்திய மெய்யியலில் பிரதிபலிக்கப்படும் சடவாத சிந்தனைகள். (Reflection of Materialism in Indian Philosophy)

Authors

  • Ponnuthurai Nathan Poologanathan இந்திய மெய்யியலில் பிரதிபலிக்கப்படும் சடவாத சிந்தனைகள். Reflection of Materialism in Indian Philosophy பொ. பூலோகநாதன் / P. Poologanathan 1 Abstract Generally, we can observe two trends in Philosophical tradition as idealism and materialism. These conceptual works are rooted western tradition as well as eastern Philosophical tradition. While the idealism deals with the Metaphysical concepts, materialism related to nature. Indian Philosophical tradition can be divided into two major systems as orthodox and Heterodox. While orthodox religions such as Samkya, Yoga, Nyaya, Vaisidika, Vedanta and Saiva Siddhantha explain the concept of God, Soul and Rebirth by accepting Vedas and Upanishada, heterodox schools such as, Jainism, Buddhism and Chārvaga explain the materialistic thoughts. Materialism denies the metaphysical concepts such as existence of God, soul and rebirth and, it implies physical and hedonistic life. Most of the Indian Philosophical systems insist the spiritual ideology while the materialism thoughts prevail in some certain places indirectly. Therefore, objective of this research is to explore the indirectly shown materialistic concepts in Indian Philosophy, and it is clarifying that the Indian Philosophy implies not only the spiritual life but also the hedonistic life. Mainly, this research uses the analytical and historical methods and also data is collected from primary and secondary sources. Key Words - Idealism, Materialism, Orthodox, Heterodox, God and Meta Physics. PhD Student, Department of Philosophy, University of Peradeniya & Former Visiting Lecturer Department of Philosophy, University of Peradeniya and University of Jaffna, Srilanka. ponnuthurainathan1985@gmail.com ஆய்வு அறிமுகம் இந்திய தத்துவ சிந்தனை மரபானது கருத்து முதல்வாத சிந்தனைகள் அல்லது ஆன்மீக சிந்தனைகளுக்கு மட்டுமன்றி பொருள் முதல்வாதம் அல்லது சடவாத கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்திருந்தது.(Bina Gupta,2012,p.55) கருத்து முதல் வாதம் என்பது பௌதீகவதீத சிந்தனைகளுடன் தொடர்புபட்டதாகவும், பௌதீக பொருட்களை விடுத்து மனத்திற்கும் அதனது சிந்தனைகளுக்கும்முக்கியத்துவம் வழங்குவதோடு ஆன்மீகம்சார் விடயங்களான கடவுள், ஆன்மா, மறுபிறப்பு, மறுவுலகு போன்ற விடயங்களை ஆய்வு செய்யும் சிந்தனை போக்காகவும் காணப்படுகிறது. (Dasgupta,p.5). மாறாக சட வாதமானது கருத்து முதல் வாதத்திற்கு எதிரான போக்கினைக் கொண்ட மைந்ததுடன் பௌதீக விடயங்களுடன் தொடர்புபட்ட மனித வாழ்வுக்கு முக்கியத்துவம் வழங்கு வதாகவும் கடவுள், ஆன்மா, மறுபிறப்பு எனும் பௌதீகவதீத விடயங்களை நிராகரித்து, மனித நடத்தைகளைப் பௌதீக நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி விளக்குவதாகவும் அமை கின்றது. (Chandadhr Sharma, 1960, p.40). இந்திய தத்துவ மரபில் வேத உபநி;டத சிந்தனைகளை ஏற்று நிற்கும் தத்துவப் பிரிவுகளான சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், வேதாந்தம், சைவசித்தாந்தம் போன்றவை வைதீக நெறிகள் என அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் கருத்து முதல் வாத சிந்தனைப் போக்கை வற் புறுத்துவதாக அமைகின்றது. வேத, உபநிடத கருத்துக்களை ஏற்காத அவைதீக நெறிகளான சமணம், பௌத்தம் (ஆதி பௌத்தம்), சார்வாகம் போன்ற தத்துவ கூடங்கள் சடவாத சிந்தனையை வலியுறுத்துவதாக அமை கின்றன. இந்திய தத்துவ மரபு போன்று மேலைத்தேய கிரேக்க சிந்தனைகளிலும் கருத்துமுதல் வாதம், சடவாதம் எனும் இரு சிந்தனை போக்குகளை நாம் காண முடியும். ஆதி கிரேக்க மெய்யியலாளர்களான தேலிஸ், அனஸ்சிமினிஸ், ஹெரக்கிளட்டஸ் போன்ற மைசீலிய சிந்தனை யாளர்களும் அவர்களுக்கு பிற்பட்ட சோபிஸ்டுக்களும் (Sophist) நவீன கால சிந்தனையாளர்களான தோமஸ் கொப்ஸ், பிரான்சிஸ் பேக்கன், காள் மார்க்ஸ், ஏங்கிள்ஸ், பயர்பார்க் மற்றும் இருத்தலிய சிந்தனையாளர்களும் சடவாதக் கருத்துக்களை மேலைத் தேய தத்துவ மரபில் வளர்த்தெடுத்தனர். மறுமுகமாக மேலைத் தேய மரபில் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்ரோட்டில் மற்றும் மத்தியகால சிந்தனையாளர்களான சென்.அகஸ்ரின், சென்.அன்சிலம், சென். அக்குவனஸ் போன்ற இறையியலாளர்களும் நவீன கால மெய்யியலாளர்களான இமானுவெல் கான்ட், ஹெகல், பார்க்ளி, கியூம், ஜீ.ஈ. மூர் போன்ற சிந்தனை யாளர்களும் கருத்து முதல் வாத சிந்தனைகளை வெளிப் படுத்தினர். வரலாற்று ரீதியாக இந்திய சிந்தனை மரபில் சடவாத கருத்துக்களினை ரிக் வேதம், உபநிடதங்கள் சிலவற்றிலும் புராண இதிகாசங்கள் மற்றும் நியாய - வைசேடிக தத்துவப் பிரிவுகளின் சில இடங்களிலும் ஆதி பௌத்தம், சமணம், சார்வாகம் போன்ற தத்துவ சிந்தனைகளிலும் காண முடிகின்றது. அதிலும் குறிப்பாக சார்வாக சிந்தனையிலேயே சடவாதம்சார் உலகியற் கருத்துக்கள் சிறப்பாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படு கின்றன. (Chandadhr Sharma, 1960, pp.40-41). இந்திய மரபில் சார்வாகமானது ஓர் சிந்தனை பள்ளியாகவும், ஓர் வாழ்க்கை நெறி முறையாகவும், பௌதீகப் பிரபஞ்சத்தை விளக்கும் ஓர் கோட்பாடாகவும் நடைமுறை வாழ்க்கையை அறிந்து அதன்படி செயற்பட மனித குலத்திற்கு வழிகாட்டும் ஓர் நெறிமுறையாகவும் எழுச்சி பெற்றது. இவ்வாறு இந்திய மரபில் வேறு காலப்பகுதியில் ஆங்காங்கே தோற்றம் பெற்று மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பேசப்பட்ட சடவாதக் கருத்துக்களை ஒன்றுதிரட்டி ஆய்வு செய்து இந்திய மெய்யியலில் சடவாதச் சிந்தனைகளின் முக்கியத்து வத்தினை வலியுறுத்துவதாக இவ்வாய்வு அமைகின்றது. குறிப்பாக வேத, உபநிடதங்களில் மறை முகமாகக் காணப்படும் சடவாத கருத்துக்களையும், வைதீக நெறியான வைசேடிய சிந்தனைகளில் காணப்படும் அணுவாதக் கோட் பாட்டினையும், சமணம் மற்றும் ஆதிபௌத்தம் போன்றவற்றில் குறிப்பிடப்படும் சடவாதக் கருத்துக்களையும் சார்வாகம் குறிப்பிடும் வெளிப்படையான இவ்வுலகியல் சார்ந்த சடவாதக் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்து இந்திய மெய்யியியலில் சடவாதத்தின் முக்கியத்துவத்தினை இவ் வாய்வு வெளிக்கொணர்கிறது. ஆய்வுப் பிரச்சினை இந்திய தத்துவ மரபில் கருத்து முதல்வாத சிந்தனைகளே மேலோங்கிக் காணப்படுகிறது. இலை மறை காயாகக் காண ப்படும் சடவாதக் கருத்துக்கள் தெளிவு படுத்தப்படவில்லை. இதனைச் சரியான முறையில் தெளிவுபடுத்துவது அவசியம். இப்பிரச்சினையை மையப்ப டுத்தியே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வின் நோக்கம் இந்திய தத்துவங்கள் கருத்துமுதல் வாதம் சார்ந்த ஆன்மீக சிந்தனைகள் மட்டுமன்றி சடவாதம் சார்ந்த உலகியற் கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது என்பதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஆய்வு முறையியல் இவ்வாய்வு முழுவதுமாக பகுப்பாய்வு முறையை (Analytical method) பயன்படுத்துவதோடு காலவோட்டத்தினூடாக சட வாத சிந்தனைகளை ஆராய்வதற்காக வரலாற்று ஆய்வு முறையையும் (Historical method) பயன்படுத்துகிறது. இவ்வாய்வுக்கு வேண்டிய தரவுகள் யாவும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தரவுகளாகப் பெறப்பட்டு ஆய்வு வடிவமைக்கப்படுகிறது. முதல்நிலை தரவுகளாக கருத்துமுதல் வாதம் பற்றிக் குறிப்பிடும் மூல நூல்களைப் பயன்படுத்தியும் இரண்டாம் நிலை தரவுகளாக இவ்வாய்வு சார்ந்து வெளிவந்த ஏனைய உரை நூல்கள், சிறுசிறு கட்டுரைகள் என்பவற்றை பயன்படுத்தியும் இவ்வாய்வு மேற்க் கொள்ளப்படுகிறது. ஆய்வு தொடர்பான விவாதங்கள் இந்திய சிந்தனை மரபில் சடமுதல் வாதத்தின் முழு வடிவத்தினை நாம் சார்வாக மெய்யியலில் காண கூடியதாகவுள்ளது. சார்வாகம், உலோகாயுதம், பூதவாதம், நாஸ்தீக மதம் போன்ற சொற்கள் யாவும் சடமுதல் வாத சிந்தனையையே பிரதி பலிக்கின்றன. வரலாற்று நோக்கில் சடமுதல்வாத கருத்துக்களின் தோற்றத்தினை நோக்கும் போது, ரிக்வேத பாடல்கள் சிலவற்றில் பொருள் முதல் வாத போக்குகள் முதன் முதலில் பிரதி பலிக்கப்படுகின்றன. உலக படைப்பு பற்றிய ரிக் வேத பாடல்களில் (Rigveda x.121.1, x.71,72) பிரகிருதியிலிருந்து உலகப் பொருட்கள் பரிண மிக்கப்படுவதாகக் குறிப்பிடப் படுகிறது. (Satchidananda Murthy,2007,p.109) இதுவே இந்திய தத்துவ மரபில் உலோகாயுதம் சார்ந்த முதல் சிந்தனையாகும். வேதங்களுக்குப் பின்னரான உபநிடதங்களில் குறிப்பாக பன்னிரு உபநிடதங்களில் ஒன்றான பிருகதாரண்ய உபநிடதத்தில் மனிதனை மரத்துடன் ஒப்பிட்டு மரத்தை வெட்ட அது வேரிலிருந்து தழைப்பது போல மனிதன் எத்தகைய வேரிலிருந்து மீண்டும் தழைப்பான் என ஞானவல்லியர் தனது குருவான மைத்திரேயிடம் வினவும் வினா ஒன்று பொருள் முதல் பட்ட நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதாக உள்ளது. (பிருக தாரண்ய உபநிடதம் 3.9.28.6) மேலும் கட உபநிடதத்தில் இவ்வுலகம் மட்டுமே மெய்யானது என்றும் வேறு உலகங்கள் இல்லை என்றும், இறப்பின் பின் வேறு வாழ்க்கை இல்லை எனக் கருதும் மக்கள் கூட்டம் பற்றியும் கூறப்படுகிறது. (கிருஸ்ணராஜா.சோ., 2001, p.67). பிற்பட்ட கால பௌத்த பாளி நூல்களை நோக்கும் போது அங்கு சடவாத சிந்தனை குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. பௌத்தத்தில் இரு வகையான சடவாதக் குறிப்புக்களை நாம் காணக்கூடியதாகவுள்ளது. 1. அனைத்து உண்மை களையும் நிராகரிக்கும் துன்பவாதப் பிரிவினர் ஒரு வகையினர். 2. இவ்வுலகில் இருப்புடையன மட்டுமே உள்ளவை எனக் கருதும் மற்றுமொரு பிரிவினர். இவர்கள் நிலம், நீர், நெருப்பு, வாயு எனும் பூதங்கள் மட்டுமே உள்ளன என்றும் ஆன்மாவென ஒன்று இல்லை என்றும் மனிதன் நான்கு பூதங்களின் சேர்க்கையினால் ஆனவன் என்றும் இச்சாரார் வாதிட்டனர். இவர்களது அபிப்பிராயப்படி வேள்விகள், பூசைகள் என்பனவற்றினால் எத்தகைய பயனும் இல்லை எனவும் நற்செயல், தீய செயல்கள் என எதுவுமில்லை எனவும் இவை எத்தகைய பயனையும் விளைவிப்பதில்லை எனவும் வாதிட்டனர். மரத்திலிருந்து உதிர்ந்த இலைபோல் இறந்த உயிர் மீண்டும் உதிர்ப்பதில்லை எனும் உயிரின் இயல்பு பற்றிய சடவாத சிந்தனை பௌத்தத்தின் தீக நிகாயாவில் காணப் படுகின்றன. (Satchidananda Murthy,2007,p.110) சம்யுத்த நிக்காயாவில் உலோகாயுத கொள்கை உடையவர் எனக் குறிப்பிடப்படும் இரு பிராமணர்கள் புத்தருடன் சம்பாசித்ததாகவும் இவர்கள் மெய்யான இருப்புடையது என எதுவுமில்லை எனும் கொள்கை உடையவர்களாக இருந்தனர் எனும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. (கிருஸ்ணராஜா.சோ., 2001, p.67). பிற்கால வைதீக நெறிகளான நியாய - வைசேடிகர் போன்றோர் வைதீக நெறி சார்ந்த கருத்து முதல்வாதிகளாக விளங்கிய பொழுதும் இவர்களது அணுவாதக் கோட்பாடு பொருள்முதல் வாத சிந்தனையை பிரதிபலிப்பதாக அமைகின்றன. நியாய நூலாசிரியரான உதயணர் இது பற்றிக் குறிப்பிடும் பொழுது அணுக்களை கடவுள் படைக்கவில்லை என்றும், அந்த அணுக்களை மரம், செடி, கொடி, விண்மீன்கள், சூரிய சந்திரர்கள், மலை, கடல் ஆகிய இப் பிரபஞ்சமாக உருவாக்குவதே கடவுளின் பணி என்று குறிப்பிடும் கருத்துக்கள் நியாய தத்துவத்தில் பொருள் முதல் வாத நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.(இ.எஸ்;.டி.ஞானன்.சே.,1999.p. 165) வைசேடிய நூலாசிரியரான கணநாத முனிவரின் வைசேடிய சூத்திரத்திலும் அதன் வழி நூலான தச பதார்த்த சாஸ்திரம் போன்ற நூல்களிலும் சடவாதம் சார்ந்த அணுக் கோட்பாடு காணப்படுகிறது. வைசேடியம் பொதுவாக பௌதீக சாஸ்திர முன்னோடிச் சிந்தனையை உடைய தத்துவ ஞானம் என்றே பலராலும் அழைக்கப்படுகிறது. இவர்களது பதார்த்த கோட்பாடு அனைவராலும் அறியப்பட்டது. பதார்த்தம் என்பது அறியக்கூடியது என பொருள்படும். இவர்கள் ஏற்புடைய முறையில் அறியக்கூடிய 07 பதார்த்தங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றனர். அவை முறையே பொருள், இயல்பு, செயல், பொதுமை, சிறப்பியல்பு, உள்ளார்ந்த தன்மை, இன்மை என்பனவாகும். இதில் பொருளை முதன்மையான பதார்த்தமாகக் குறிப்பிடுகின்றனர். இப்பொருட்களை ஒன்பது வகையாகப் பாகுபடுத்துகின்றனர். இப்பொருட்களினாலேயே இப்பிரபஞ்சம் ஆக்கப் பட்டிருப்பதாக வைசேடியம் குறிப்பிடுகிறது.வைசேடிகரினது இப் பதார்த்தக் கோட்பாடு சடவாத சிந்தனையை பிரதிபலிப்பதாக அமைகிறது. (மேலது, pp.170- 171) ஜைன தர்மம் எனப் போற்றப்படும் சமணத்திலும் சடவாதக் கருத்துக்கள் காணப்படுகின்றன. உலகம் பற்றி ஜைனம் கூறும்போது இவ்வுலகம் யாராலும் படைக்கப்படவில்லை. இயல்பாகவே எப்போதும் இருப்பதாகும். இதற்கு முதலோ முடிவோ கிடையாது. அது என்றும் நிலைத்திருக்கும். இது இல்லாமல் போவதும் இல்லை. இவ்வுலகு ஆறு பொருட்களால் ஆனது. இவ்வுலகைப் பகுத்தால். ஆறு பொருட்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. இவ் அறுவகை பொருட்களையே ஜைனம் திரவியங்கள் என்று குறிப்பிடுகிறது. அவற்றை உயிர், உயிர் அற்றவை. அதாவது ஜீவன் - அஜீவன் எனப் பிரித்து இவற்றின் சேர்க்கையே உலகம் என ஜைனம் குறிப்பிடுகிறது. இவ் அறுவகை பொருட்களை பற்றிய விரிவான விளக்கமே ஜைன தத்துவமாகும். ஜைன தத்துவத்தில் குறிப்பிடப்படும் புத்கலம் பற்றிய கோட்பாடு சடமுதல் வாத கருத்துக்களை பிரதிபலிப்பதாகவுள்ளது. (மேலது, p. 118) அடுத்து சடவாதக் கருத்துக்களின் முழுமையான வடிவத்தினை சார்வாக மெய்யியலில் நாம் காண முடிகிறது. Cārvaka எனும் சொல்லானது eat, drink and merry எனப் பொருள்பட்டு இன்ப வாழ்வைக் குறிப்பதாக அமைகின்றது. (Bina Gupta, 2012,p.56). சார்வாக சிந்தனை பற்றிய தகவல்களைச் சார்வாக தத்துவத்திற்கு எதிரான போக்கினைக் கொண்ட நூல்களினூடாகவே அறிய முடிகிறது. இது சார்வாக சிந்தனையின் துரதிஸ்டம் என்றே குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, பிரம சூத்திரம், சங்கரர் வேதாந்தம், நீலகேசி, சிவஞான சித்தியார், அர்த்த சாஸ்திரம், புராண, இதிகாசங்கள் மற்றும் பௌத்த இலக்கியங்கள் ஊடாக அறிந்து கொள்ளலாம். பிரகஸ்பதி என்பவரால் தொகுக்கப்பட்ட பிரகஸ்பதி சூத்திரத்திலேயே புராதன இந்திய சடவாதக் கருத்துகளின் தொகுப்பினை நாம் முழுமையாக காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு பல்வேறு மாறுபட்ட தரப்புகளிலிருந்தே சார்வாக மெய்யியல் பற்றிய கருத்துக்களை கூறக் கூடியதாக காணப்படுகின்றது. பொதுவாக அறிவிற்கு அடிப்படை வாயிலாக புலன்களை மட்டும் கருதும் சார்வாகர் பிரதியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் எனும் மூன்று அளவைப் பிரமாணங்களில் பிரதி யட்சத்தை மட்டுமே ஒப்புக் கொண்டவராய் இவ்வுலகமும், உடம்பும் மட்டுமே மெய் என்றும் உயிரும் இறைவனும் பொய் என்ற முடிவுக்கு வந்தனர். (Hiriyanna.M,2009,p.189). “உடம்புக்கு வேறாய் உயிரை நாம் கண்டதில்லை. எனவே உயிரின் பொருட்டும், இறைவன் பொருட்டும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளும் இல்லை. உயிர் இல்லை என்பதால் மறுவுலக வாழ்வும் இல்லை. பாவ புண்ணி யங்களும் இல்லை என்பதே இவர்களது கொள்கை. நிலம், நீர், காற்று, தீ என்னும் நான்கு பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகு எனவும் இதை விடுத்து பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை அடியோடு நிராகரிக்கின்றனர். பொறி, புலன்களின் தோற்றம் இவ் நான்கு வகை பூத சேர்க்கையினால் ஆனதென்றும் ஆகாயம் எனும் ஐந்தாவது பூதத்தை இவர்கள் ஏற்கவில்லை. ஏனெனில் ஆகாயத்தை நாம் புலன்களால் காணமுடியாது என்பதனால் ஆகும். (Bina Gupta, 2012,p.60). அறிவும், இன்பமும் உடலிற்கே உரியது என்றும் உடல் அழியும் போது இவையும் அழியும் என்பது சார்வாகரின் நிலைப் பாடாகும்.(Rathakrishnan.S,1971,p.279) அறிவுக்கு அடிப்படையாக காட்சியினைக் கொள்ளும் இவர்கள் பகுத்தறிவுசார் அனுபவ வாதிகளாக விளங்கியதனால் கடந்த நிலைக்குரியதான கடவுள், ஆன்மா, மறுவுலகு, மறுபிறப்பு போன்றவற்றையும் நிரா கரிக்கின்றனர். பூத சேர்க்கையும் பிரிவுமே ஆக்கமும் அழிவும் எனும் சார்வாகரின் நிலைப்பாடு சமணம், நியாய வைசேடிகரினது உலகு பற்றிய அணுவாதக் கோட்பாட்டினை ஒத்ததாக அமைகிறது. கண்ணால் காண்பதை மாத்திரமே உண்மை என கொள்ளும் இவர்கள் உடலில் வேறாய் உடல் தோன்றுவதற்கு முன்பும் அழிந்ததற்கு பின்னரும் நிலைத்து நிற்பதாய் உள்ள உயிர் எனும் ஒன்று இல்லை என்பதை வற்புறுத்துகின்றனர். (Cnandradhar Sharma, 1960,pp.41-42). பூத சேர்க்கையால் உடல் தோற்றம் பெறுகின்ற போது அதே சேர்க்கையின் விளைவால் அவ்வுடலுக்கு உணர்வு ஏற்படுகிறது. இதனை ஓர் சிறப்பான உதாரணம் மூலம் இவர்கள் விளக்குகின்றனர். வெற்றிலைஇபாக்கு சுண்ணாம்பு எதிலும் இல்லாத சிவப்பு நிறம் மூன்றையும் சேர்க்கும் போது எங்கிருந்து வந்ததோ அது போன்று பூதச் சேர்க்கையால் உடலுக்கு அறியும் சக்தி ஏற்படுகிறது என குறிப்பிடுகின்றனர். (Chatterjee, S.C, & Datta, D.M, 1939, P.28). படைப்புக் கொள்கையை சார்வாகர் நம்புவதில்லை. இதன் காரணமாக பிரபஞ்ச உருவாக்கத்திற்கு ஓர் சித்துப் பொருள் அவசியம் என்ற கொள்கையை நிரா கரிக்கின்றனர். கர்மப் பயன் விதி வாதம் என்பவற்றை நிராகரிக்கும் இவர்கள் இவற்றுக்கு பதிலீடாக சுபாவக் கோட்பாட்டினை முன் வைக்கின்றனர். நான்கு வகை பூதங்களை பிரதாà

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.9

Keywords:

சடவாதம், கருத்துமுதல்வாதம், வைதீகம், அவைதீகம், பௌதீகவதீதம்.

Abstract

பொதுவாக மெய்யியல் மரபில் கருத்துமுதல் வாதம் மற்றும் சடமுதல் வாதம் எனும் இரு சிந்தனை போக்குகளை நாம் காணமுடியும். இவ்விரு சிந்தனைப் போக்குகளும் மேலைத்தேய மெய்யியலில் மட்டுமின்றி கீழைத்தேய சிந்தனைகளிலும் ஆழமாக வேரூன்றிக் காணப்படுகின்றன. கருத்துமுதல்வாத சிந்தனையானது மெய்யியலில் பௌதீகவதீத  சிந்தனைகளுடன் தொடர்புபட்டதாக காணப்பட சடவாதமானது பௌதீக விடயங்களுடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. பொதுவாக இந்திய தத்துவ சிந்தனைகளை இரு பெரும் பிரிவுகளுக்குள் உள்ளடக்க முடியும். அவை வைதீக மதங்கள் என்றும், அவைதீக மதங்கள் என்றும் பிரிக்கப்படுகின்றன. வைதீக நெறிகளான சாங்கியம், யோகம், நியாயம், வைசேடியம், வேதாந்தம், சைவசித்தாந்தம் போன்றவை வேத-உபநிடத கருத்துக்களை ஏற்று கடவுள், ஆன்மா, மறுபிறப்பு போன்ற கருத்துமுதல்வாத சிந்தனைகளை விளக்குவதாக காணப்பட அவைதீக சமயங்களான சமணம், பௌத்தம், சார்வாகம் போன்றவை கூடுதலாக சடவாத சிந்தனைகளை விளக்குவதாக அமைந்துள்ளன. சடவாதமானது பொதுவாக கடவுளின் இருப்பு, ஆன்மாவின் இருப்பு, மறுபிறப்பு போன்ற பௌதீகத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை மறுப்பதுடன் இவ்வுலக வாழ்க்கையை மட்டும் வற்புறுத்தும் கோட்பாடாக அமைகிறது. பெரும்பாலான  இந்திய தத்துவங்கள் கருத்துமுதல் வாதத்தினை வற்புறுத்துவதாக காணப்பட சடவாத கருத்துக்கள் ஒருசில இடங்களிலேயே மறைமுகமாக காணப்படுகின்றன. எனவே இவ்வாய்வானது, இந்திய சிந்தனைகளில் மறைமுகமாக காணப்படுகின்ற சடவாத கருத்துக்களை வெளிக்கொணர்வதுடன் ஆன்மீக வாழ்வு மட்டுமின்றி இன்பநல வாழ்க்கையையும் இந்திய மெய்யியல் வற்புறுத்துகின்றது என்பதை தெளிவுபடுத்துவதுமாக அமைகிறது. இவ்வாய்வானது பகுப்பாய்வு முறை, வரலாற்று ஆய்வு முறை என்பனவற்றை பயன்படுத்துவதுடன் இவ்வாய்வுக்கு வேண்டிய தரவுகள் யாவும் முதல்நிலை, இரண்டாம்நிலை தரவுகளாக பெறப்பட்டு இவ்வாய்வு வடிவமைக்கப்படுகிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-19

Issue

Section

Articles