அழிவுற்ற இசைத் தமிழ் நூல்கள்

Extinct Tamil Music Books

Authors

  • Mr Manikandan Manickam Department of Tamil, Alagappa University, Karaikudi, Tamil Nadu, India.

Keywords:

தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இசை, தமிழ் இசை நூல்கள்

Abstract

ஆய்வுச் சுருக்கம்

 

உலகில் முத்தமிழ் என்ற அடைச்சிறப்பை தமிழ் மொழி மட்டுமே கொண்டுள்ளது.  இம்மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்றாக வகைப்படுத்தப்பெற்று வளர்ந்து வருகிறது.  இவற்றுள் இரண்டாவதாக வைக்கப்பெற்றுள்ள தமிழர் இசை பல இன்ன்னல்களுக்கு இடையே பன்னெடுங்காலமாகச் சிறப்புற்று வளர்ந்து வருகின்றது. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை என்பார்கள்.  அதற்கேற்ப அன்று முதல் இன்று வரை இசையானது தோற்றம் பெற்று பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.  கேட்போரையெல்லாம் இன்புறச் செய்யும் பெருமை கொண்டது. உயிர் பிறந்திடும் முன்னே ஒலி பிறந்தது.  அந்த ஒலி பிறக்கின்ற போதே இசையாய் உருவெடுத்தது.  அந்த இசை தமிழர்களின் இயற்கை உணர்வாலும் அறிவாலும் ஆற்றலாலும் குரல் இசை, கருவி இசை என உருப்பெற்றுத் தமிழர் இசையாக வளர்ந்தது.  பண்டைக்காலம் தொட்டே தனித்த தன்மையுடன் விளங்கி பிற தேசத்திற்கும் பரவி வந்த தமிழர் இசைக்கு இடைக்காலத்தில்  ஒரு தடை ஏற்பட்டது.  அவ்வாறு ஏற்பட்டதன் விளைவாக பல்வேறு இசைத்தமிழ் நூல்கள் அழிவிற்கு உட்படுத்தப்பட்டன. சமய நம்பிக்கை பண்பாட்டு அழிப்பு போன்றவற்றால் இசைத்தமிழ் நூல்கள் அயலவர்களால் தீயினுக்கு இறையாக்கப்பட்டன.மறைந்து போன இசைத்தமிழ் நூல்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.  இசைத்தமிழ் இலக்கியங்கள், இசைத்தமிழ் இலக்கணங்கள் என வகைப்படுத்தப்பட்டவற்றினை இன்றும் தமிழ் உலகம் காணக்கிடைக்காத நிலையே நீடிக்கின்றது. அழிவுற்ற இசைத்தமிழ் நூல்களைப் பற்றிய ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-07-20

Issue

Section

Articles