‘ஆண்டாள்’ மலேசியத் திரைப்படம் முன்னிருத்தும் சமுதாய அவலங்கள்

Authors

  • Silllalee S. Kandasamy, Assistant Professor Dr. Department of Modern Languages, University Tunku Abdul Rahman, Kajang, Malaysia.
  • Rajantheran Muniandy, Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol5no1.2

Abstract

Cinema is the best past time among Mass Media and is enjoyed by the people Crossing the tool which gives only pleasure, Cinema steps into the area to work for the betterment of the society. The scripts written for the Cinema range from social evils, expectations, thoughts and development. In this regard Cinema becomes a Contemporary document of the Society. It also explicit the culture of the society just like a reflection in a mirror. The life that prevails in the society becomes the nucleus in the cinema. With this power, Cinema industry started flourishing in Malaysia from 1990. Though with the traces of Tamil Nadu Cine industry, Malaysian cinema restricts itself to escalate the social situation of Malaysian Cinema Andal which was released in2005 has brought out the harsh realities of Malaysian Social evils. It highlights the immature infatuation of love, prostitution, drug menace and so on. This Paper deals with how these things have been shot in the film. Key Words.

 

Key Words:

Malaysian Cinema, social ill-fames, infatuation, prostitution, drug menace

 

ஆய்வுச் சுருக்கம்:

திரைப்படத்துறை என்பது மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு-மனமகிழ் ஊடகமாக விளங்குகிறது. இன்றைய காலத்தில் திரைப்படங்கள் மனமகிழ் ஊடகம் எனும் நிலைப்பாட்டையும் கடந்து மக்களிடையே சமுதாய விழிப்புணர்வை மேலோங்கச் செய்யும் சாதனமாகவும் வளர்ந்துள்ளது. பொதுவில் ஒரு நாட்டில் வாழும் மக்களிடையே நிலவும் சமுதாயச் சிக்கல்கள், அவலங்கள், போராட்டங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், ஆகியவற்றை மையப்படுத்தியே திரைக்கதைகள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் திரைப்படம் சமகால வாழ்க்கையின் வரலாற்று ஆவணமாக அமைவதுடன் ஒரு சமூகத்தின் பண்பாட்டுப் பதிவாகவும் நிலைபெறுகிறது. ஒரு சமுதாயத்தில் நிகழும் அவலங்களை எடுத்துரைப்பதைக் காட்டிலும் அதனைக் காட்சியாகக் காட்டுவது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அந்த வகையில் திரைப்படங்கள் மனித சமுதாயத்தின் வாழ்க்கையைப் பிரதிபளிக்கும் கண்ணாடியாக உள்ளது. இதில் வெளிப்படும் சிந்தனைகளும் மக்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை உண்டு செய்ய வல்லவை. மலேசியாவில் 1990-களில் மலேசியத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு தொடங்கியது. மலேசியத் திரைப்படமானது தமிழ்நாட்டுத் திரைப்படங்களின் தாக்கத்தில் தோன்றியதுவே ஆயினும் அவை மலேசியத் தமிழர்களின் வாழ்க்கையையும், பண்பாட்டையும் சமூகவியலையும் காட்டுவதாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த “ஆண்டாள்” திரைப்படம் மலேசிய மக்களின் சமுதாய அவலங்களை உள்ளபடி சித்தரிக்கக் கூடிய திரைப்படமாக எழுந்துள்ளது. இத்திரைப்படத்தில் காட்டப்படும் இளம் வயதில் தோன்றும் பக்குவமற்ற காதல், விலைமாதர் நாட்டம், போதைப்பொருளால் சீரழிவு எனும் மூன்று சமுதாய அவலங்களும் மலேசிய மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்யும் முக்கியக் கருப்பொருள்களாக கையாளப்பட்டுள்ளன

 

குறிப்புச் சொற்கள்:

மலேசியத் தமிழ்த்திரைப்படம், சமுதாய அவலங்கள், பக்குவமற்ற காதல், விலைமாதர், போதைப்பழக்கம், ஹெர்மனுதிக் கோட்பாடு

 

Downloads

Download data is not yet available.

Author Biographies

Silllalee S. Kandasamy, Assistant Professor Dr., Department of Modern Languages, University Tunku Abdul Rahman, Kajang, Malaysia.

The author is a Assistant Professor in the Department of Modern Languages, University Tunku Abdul Rahman, Kajang, Malaysia.

 

Rajantheran Muniandy, Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

The author is a Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. rajantheran@gmail.com

Downloads

Published

2018-08-11

Issue

Section

Articles